டிக் டாக்கிற்கு போட்டியாக ஷார்ட்ஸ் (Shorts) என்னும் புதிய செயலியை யூடியூப் அறிமுகம் செய்துள்ளது.

முதலில் இந்தியாவில் அறிமுகமாகும் இந்த செயலி, அடுத்த சில மாதங்களில் மற்ற நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.ஷார்ட்ஸ் செயலியின் மூலம் பயனர்கள் 15 நொடி வரையிலான வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியும். ஏற்கனவே ரீல்ஸ் என்னும் வீடியோ பதிவேற்றும் செயலியை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்த நிலையில் யூடியூப் ஷார்ட்ஸ் செயலியோடு களமிறங்கியுள்ளது.இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அதே போன்ற சேவையை யூடியூப் அறிமுகப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

By RJ

Leave a Reply