விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பெ.விருமாண்டி இயக்கியுள்ள படம் – க/பெ.ரணசிங்கம். ஜிப்ரான் இசையமைப்பில் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.

இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. சமீபகாலத் தமிழ்ப் படங்களில் இடம்பெறும் விவசாயம் மற்றும் தண்ணீர் பிரச்னைகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு எதிராக சாதாரண மக்கள் போராடுவது போன்ற காட்சிகளே டீசரில் அதிகமாக இடம்பெற்றுள்ளன.

க/பெ. ரணசிங்கம் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜீ பிளெக்ஸ் ஓடிடி தளத்தில் அக்டோபர் 2 முதல் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தை ஓடிடி தளத்தில் நேரடியாகப் பார்ப்பதற்கான கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 199 செலுத்தினால் க/பெ. ரணசிங்கம் படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் பார்க்க முடியும்.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள பறவைகளா என்கிற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

 

Leave a Reply