கொடிகாத்த குமரன் திருப்பூர் குமரனின் 117 வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், கரூர் காவல்நிலையம் அருகே உள்ள, தியாகி குமரன் சிலைக்கு செங்குந்தர் இளைஞர் பேரவையின் மாவட்ட செயலாளர் மோகன் பெரியசாமி தலைமையில், திருப்பூர் குமரனின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் உறுதி மொழி எடுத்துக் கொண்ட அந்த அமைப்பினர்., விரைவில் கொடிகாத்த குமரனுக்கு திருப்பூரில் மணிமண்டபம் கட்ட வேண்டுமென்றும், திருப்பூர் ரயில் நிலையத்திற்கு தியாகி திருப்பூர் குமரன் பெயர் சூட்ட வேண்டும் என்றும், வெங்கமேட்டில் திருப்பூர் குமரனின் முழு திருவுருவ சிலை அமைக்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட தியாகிகள் வாரிசுகள் சங்கத்தின் அமைப்பு செயலாளர் ஓம்சக்தி சேகர், சிபிஎம் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செங்குந்தர் இளைஞர் பேரவை நிர்வாகிகள் கருவை ராஜா, மாங்கல்யம் ராஜ்குமார், சக்திவேல், செந்தில்குமார், தமிழழகன், குவாலிட்டி ரமேஷ், சீனிவாசன், விஜி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply