காற்று மாசுபாட்டை தவிர்க்கும் வகையில் பழைய வாகனங்களை பயன்படுத்த மத்திய அரசு தடை விதிக்க உள்ளது.

மத்திய அரசின் திட்டத்தின் மூலம் 15 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய பழைய வாகனங்களை வரும் மாதம் முதல் பயன்படுத்த முடியாது. மேலும், புதிதாக வாகனங்கள் வாங்குபவர்களுக்கு சலுகை வழங்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் பழைய வாகனங்களை அழிப்பதற்காக வாகனங்கள் ஸ்க்ராப்பிங் கொள்கை நடைமுறைக்கு வர உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த முறை அமல்படுத்தப்பட்டால் வாகன விற்பனை அதிகரிக்கும் என்றும், நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என்றும் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு புதிய வாகனங்கள் 30 சதவீதம் வரை மலிவாக கிடைக்கும் என்றும், மாசு கட்டுப்பாடு 25 சதவீதம் குறையும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதே போல் பழைய வாகனங்களை அழிக்கும் இடங்களில் வேலை வாய்ப்பு உருவாகும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. எஃகு, அலுமனியம், பிளாஸ்டிக் போன்ற மறுசுழற்சிக்கு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply