முன்னணி காமெடி நடிகர் வடிவேலுவை நகைச்சுவையில் பின்பற்றும் பாலாஜி, அவரைப் போன்றே முகச் சாயலும் கொண்டவர். சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்த இவர் திரைப்படங்களிலும் காமெடி நடிகராக நடித்து வந்தார். விஜய் டிவியில் இவர் பங்கேற்று நடித்த ‘அது இது எது’ நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் திடீர் மாரடைப்பு காரணமாக இரு கைகளும் வாதம் ஏற்பட்டு முடங்கி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் தொடர் சிகிச்சைக்குப் பின்னர் போதிய வசதி இல்லாத காரணத்தால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட வடிவேல் பாலாஜி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மரணம் குடும்பத்தாரையும், திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமூகவலைதளங்களில் ரசிகர்கள் பலரும் வடிவேல் பாலாஜிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

45 வயதான வடிவேலு பாலாஜிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

By RJ

Leave a Reply