ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன் அடுத்த விற்பனை இன்று நடைபெற உள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது சியோமி மற்றும் அமேசான் வலைதளத்தில் ஆர்டர் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.சியோமி நிறுவனத்தின் சமீபத்திய பட்ஜெட் ஸ்மார்ட்போன் மாடலான ரெட்மி 9 பிரைம் சாதனத்தை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை இன்று மதியம் 12 மணி தொடங்கப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் தளம் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.சியோமி நிறுவனத்தின் ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன் சாதனம் இன்று மதியம் 12 மணி முதல் சியோமியின் மி.காம், அமேசான்.இன் மூலம் விற்பனைக்கு வருகிறது. ரூ .9,999 என்ற விலையில் இந்த ஸ்மார்ட்போன் மாடலை சியோமி நிறுவனம் அறிமுகம் செய்தது, இது ரெட்மி 9 இன் உலகளாவிய மாறுபாட்டின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகும்.ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன் சாதனம் இன்று இரண்டு வேரியண்ட் வகையில் விற்பனைக்கு வருகின்றன, அதில் முதலாவது மாடல் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விருப்பத்தில் வெறும் ரூ .9,999 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. அதேபோல், இதன் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்ட் வெறும் ரூ .11,999 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இரண்டு மாடல்களும் 5020 எம்.ஏ.எச் பேட்டரியுடன் வருகிறது.

By RJ

Leave a Reply