கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் பணியாற்றியவர்களுக்கு சமூக சேவகர் விருது கரூர் மாவட்ட விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் வழங்கப்பட்டது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா என்னும் கொடிய நோய்த் தொற்றின் காரணமாக கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கினர். இந்நிலையில் பொருளாதாரச் சூழ்நிலையிலும், நடைமுறை வாழ்க்கையிலும் பொதுமக்கள் பட்ட துன்பங்களிலிருந்து அவர்களை மீட்கும் பணியில் பல்வேறு துறையை சார்ந்தவர்களும் களப்பணி ஆற்றினர். அவர்களைக் கௌரவப்படுத்தும் விதமாக “ரியல் ஹீரோ ஆஃப் கொரோனா ஃபைட்டர்” என்ற சமூக சேவகர் விருது கரூர் மாவட்ட தலைமை விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் வழங்கப்பட்டது.

காவல் துறை, போக்குவரத்துத் துறை, தீயணைப்புத் துறை, தூய்மைப் பணியாளர்கள் போன்றவர்களை கௌரவிக்கும் பொருட்டு குளிர்கால கம்பளம் வழங்கும் விழா மற்றும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியின் சேவையைப் பாராட்டி நினைவு கேடயம் வழங்கும் நிகழ்ச்சி கரூர் நகரத்தார் மண்டபத்தில் நடைபெற்றது. விஷால் மக்கள் நல இயக்க மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முன்னதாக கரூர் திருக்குறள் பேரவை அமைப்பின் செயலாளர் மேலை பழனியப்பன் வரவேற்புரை ஆற்றினார். ஸ்டீபன் பாபு முன்னிலை வகித்தார். மக்கள் நீதி மையம் கார்த்திகேயன், சின்ன சேங்கல் அரசுப்பள்ளி தலைமையாசிரியர் அன்புசெல்வம், சமூக ஆர்வலர் ராமதாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிறப்பு அழைப்பாளர்களாக கராத்தே மாஸ்டர் குப்புசாமி, மீன் வளர்ப்பு துறை ஜெயச்சந்திரன், யாஸ் நற்பணிமன்றம் திருநாவுக்கரசு, கிருத்திகா அறக்கட்டளை ராமச்சந்திரன், சமூக ஆர்வலர் ஜார்ஜ், ஏ.வி.ஆர் டிரேடர்ஸ் அக்னி இராமச்சந்திரன், சமூக ஆர்வலர் ஜனார்த்தனன் விமலா உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கரூர் மாவட்ட தலைமை விஷால் மக்கள் நல இயக்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Leave a Reply