வளர் இளம் குழந்தைகள் மற்றும் இளம் பெண்கள் கல்வி மற்றும் கண்ணியமான பணிச் சூழல் குறித்த கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அளவிலான விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் கிருஷ்ணராயபுரத்தில் சைக்கோ அறக்கட்டளை மூலமாக நடைப்பெற்றது.
திருப்பூர் மக்கள் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மெல்வின் இந்த கருத்தரங்கை துவக்கிவைத்து பஞ்சாலைகளில் பணிசெய்யும் பெண் தொழிலாளர்கள் கண்ணியமான பணிச்சூழலில் பணிசெய்வதற்கான குறைந்த பட்ச தகுதிகளை உருவாக்க வேண்டும் என்றார்.

கரூர் மாவட்டத்தில் கிராமம்தோரும் பஞ்சாலையில் பணிசெய்யும் பெண்களை கணக்கெடுக்கவேண்டும்,
பூ சாகுபடியில் அதிகமான குழந்தைகள் கிருஷ்ணராயபுரம் குளித்தலை பகுதியில் ஈடுபடுகின்றனர். அவர்களை தொடந்து கண்கானித்து பள்ளிகளில் தொடந்து படித்திட முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும்,
கிருஷ்ணராயபுரம் பழையஜெயங்கொண்டம் பகுதியில் பெண்குழந்தைகள் அதிக அளவில் வேலைக்கு செல்லுவதை தடுக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்,
பஞ்சாலைக்கு வேலைக்கு செல்பவர்கள் கண்னியமான முறையில் குறைந்தபட்ச திட்டத்துடன் நடத்தப்படவேண்டும் போன்ற கருத்துக்கள் அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

மாவட்ட சட்டப்பணிகள் ஆனைக்குழுவின் செயலர் மோகன்ராம் அவர்கள் பயிற்சியை துவக்கிவைத்ததார். வழக்கறிஞர்கள் பாப்பாத்தி, பானுமதி சைக்கோ அறக்கட்டளையின் பிலோராணி ஆகியோர் கலந்துகொண்டு பெண்களுக்கான சட்டங்கள், உட்புகார் குழுவின் செயல்பாடுகள், புதிய விடுதிகளின் சட்டம் போன்றவை குறித்து பேசினர்.
சைக்கோ அறக்ககட்டளையின் இயக்குநர் கிறிஸ்துராஜ் கரூர் மாவட்டத்தில் தொடந்து பஞ்சாலைகளில் பணிசெய்யும் பெண்களின் பணிச்சுமை பாதுகாப்பு, குறைந்தபட்ச கூலி போன்றவை முறைப்படுத்தப்படவேண்டும் என்றார்.
சைக்கோ அறக்கட்டளையின் ஒன்றிய பணியாளர் நாகலெட்சுமி வரவேற்றார். சுசீலா நன்றி கூறினார்.

Leave a Reply