கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், மாயனூர் ஊராட்சி மதுக்கரையிலும், வாரியிலும், பசுமைக்குடி தன்னார்வ அமைப்பு வழங்கிய மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகள் இன்று சாலை ஓரங்களிலும் நடப்பட்டது. இந்நிகழ்வில் கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாசலம் மற்றும் மாயனூர் ஊராட்சி மன்றத் தலைவர் கற்பகவல்லி ரகுபதி ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். வார்டு உறுப்பினர் சரவணன், மாயனூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் இரத்தினம், எழுதியாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கலா மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply