ஒப்போ நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆன ஒப்போ எஃப் 17 வருகிற செப்டம்பர் 21 முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது செப்டம்பர் 10 முதல் இன்றுவரை ப்ரீ-ஆர்டர் செய்ய கிடைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • இந்த ஸ்மார்ட்போன் இந்த மாத தொடக்கத்தில் ஒப்போ எஃப் 17 ப்ரோவுடன் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்நேரத்தில் ஒப்போ எஃப் 17 ப்ரோ வேரியண்டிற்கான விலை மற்றும் கிடைக்கும் தன்மையை நிறுவனம் பகிர்ந்து கொண்டாலும், வெண்ணிலா ஒப்போ எஃப் 17 பற்றிய தகவல்கள வெளிப்படுத்தவில்லை.

ஆனால் தற்போது ஒப்போ நிறுவனம் அதன் எஃப் 17 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் கிடைக்கும் தன்மையை அதிகாரப்பூர்வமாக பகிர்ந்துள்ளது, இது இரண்டு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் உள்ளமைவுகளில் வரும் என்றும் ஒப்போ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒப்போ எஃப் 17 ஸ்மார்ட்போன் ஆனது 6 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி என இரண்டு வகைகளில் வரும். பேஸிக் 6 ஜிபி ரேம் வேரியண்டின் விலை ரூ.17,990 என்றும், மறுகையில் உள்ள 8 ஜிபி ரேம் வேரியண்டின் விலை ரூ.19,990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது கிளாசிக் சில்வர், டைனமிக் ஆரஞ்சு மற்றும் நேவி ப்ளூ ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கும்.
இந்த ஸ்மார்ட்போன் தற்போது ப்ரீ-ஆர்டர் செய்ய கிடைக்கிறது மற்றும் செப்டம்பர் 21 முதல் ஆஃப்லைன் கடைகள் மற்றும் முன்னணி இ-காமர்ஸ் வலைத்தளங்கள் வழியாகவும் விற்பனைக்கு வரும்.
விற்பனை சலுகைகளை பொறுத்தவரை, அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டிலிருந்து ஒன்பது மாதங்கள் வரை நோ காஸ்ட் இ.எம்.ஐ திட்டங்களைப் பெறலாம். மேலும் வாடிக்கையாளர்கள் ரூ.1,500 என்கிற உடனடி தள்ளுபடியை பேங்க் ஆஃப் பரோடா கிரெடிட் கார்டுகளுடன் பெறலாம்.

ஒப்போ எஃப் 17 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:
– டூயல் சிம் (நானோ) ஆதரவு
– ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 7.2
– 6.44 இன்ச் புல் எச்டி டிஸ்ப்ளே
– வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் வடிவமைப்பு
– ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 SoC
– 8 ஜிபி வரை ரேம்
– குவார் ரியர் கேமரா மைப்பு
– 16 மெகாபிக்சல் முதன்மை சென்சார் (எஃப் / 2.2) + 8 எம்பி வைட்-ஆங்கிள் கேமரா (எஃப் / 2.2) + 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார் (எஃப் / 2.4) + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் (எஃப் / 2.4)

– 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா (எஃப் / 2.0)
– 64 ஜிபி மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
– இரண்டும் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக விரிவாக்கக்கூடியவை

– 4 ஜி வோல்டிஇ
– வைஃபை
– ப்ளூடூத்
– ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
– யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
– 30W VOOC பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
– 4,000mAh பேட்டரி
– 7.45 மிமீ தடிமன், 163 கிராம் எடை.

 

By RJ

Leave a Reply