கடந்த வாரங்களில் நடந்த ஒன்பிளஸ் நோர்ட் பிளாஷ் விற்பனையை நீங்கள் தவறவிட்டு இருந்தால், இன்றைய தினத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் ஒன்பிளஸ் நோர்த் ஸ்மார்ட்போன் இன்று பிற்பகல் 2 மணிக்கு அமேசான்.இன் வழியாக மீண்டும் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய விற்பனையைப் போலவே, இது இரண்டு ஸ்டோரேஜ் வகைகளின் கீழ் மட்டுமே வாங்குவதற்கு கிடைக்கும்.இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் மார்பிள் ப்ளூ மற்றும் ஓனிக்ஸ் பிளாக் என்கிற இரண்டு வண்ணங்களில் வாங்கலாம். விற்பனை சலுகைகளை பொறுத்தவரை, ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு வழியாக பணம் செலுத்துபவர்களுக்கு அமேசான் இந்தியா கூடுதலாக ரூ.1,000 என்கிற தள்ளுபடியை அளிக்கிறது. கிரெடிட் கார்டு / டெபிட் கார்டு வழியிலான இஎம்ஐ-க்கள் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும்.இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் மாடலின் இரண்டு ஸ்டோரேஜ் வகைகள் மட்டுமே வாங்க கிடைக்கிறது. அதில் ஒன்று 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ், இது ரூ.27,999 க்கு வாங்க கிடைக்கும். நீங்கள் அதிக ரேம் மற்றும் ஸ்டோரேஜை விரும்பினால் ரூ.29,999 செலவிட வேண்டும். இந்த மாடல் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜை வழங்கும்.
முன்னதாக, ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனின் நுழைவு நிலை மாறுபாடு ஆனது செப்டம்பர் மாதத்திற்குள் ரூ.24,999 க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதைப்பற்றி பேச்சு மூச்சு இல்லை. அது 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜை வழங்கும். ஒன்பிளஸ் நோர்ட்

ஸ்மார்ட்போனின் முழு அம்சங்கள்: – டூயல் சிம் (நானோ) ஆதரவு
– ஆண்ட்ராய்டு 10-அடிப்படையிலான ஆக்ஸிஜன்ஓஎஸ் 10.5
– 6.44 இன்ச் முழு எச்டி + (1,080×2,400 பிக்சல்கள்) லிக்விட் அமோலேட் டிஸ்ப்ளே
– 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
– 20: 9 திரை விகிதம்
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
– நைட் மோட் ஆதரவு
– ரீடிங் மோட் ஆதரவு
– வீடியோ என்ஹான்சர் ஆதரவு

By RJ

Leave a Reply