கரூரில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய எம்.ஆர்.வி. டிரஸ்ட் வரும் காலத்தில் மாணவர்கள் பல்வேறு அரசு தேர்வில் வெற்றி பெற பயிற்சி முகாம்களை அமைக்க உள்ளது. இரண்டாம் ஆண்டு எம்.ஆர்.வி.டிரஸ்ட் துவக்க விழாவில் அமைச்சர் எம்.ஆர்.விஜய்பாஸ்கர் விளக்கம்.

கரூரில் பல்வேறு சமுதாய நலப்பணிகளில் ஈடுபட்டு வரும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையிலான எம்.ஆர்.வி. டிரஸ்ட் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று கரூரில் உள்ள திருவள்ளுவர் மைதானத்தில் இருந்து கோவை சாலையில் உள்ள பிரேம் மஹால் வரையிலான தூரம் வரை நடைபயண ஊர்வலம் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா மற்றும் எம்.ஆர்.வி.டிரஸ்டின் முக்கிய பொறுப்பாளர்கள், இளைஞர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர். ஊர்வலத்தின் நிறைவில் பிரேம் மஹாலில் நடைபெற்ற விழாவில் மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், விளையாட்டு வீரர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பல்வேறு நலத்திட்ட்டங்களை வழங்கி வாழ்த்தி பேசிய தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.

உலகத்தையே புரட்டி போட்ட நோய்த்தொற்று சீனாவில் ஆரம்பித்து இன்று நமது நாட்டில் உச்சத்தில் இருக்கிறது. தமிழக முதலமைச்சர் இதற்காக வல்லுனர் குழுக்களை கலந்தாலோசித்து எடுத்த நடவடிக்கையினால் பாரத பிரதமர் பாராட்டும் வகையில் இன்று தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருக்கிறது என்றார். மேலும், அது போன்ற இக்கட்டான காலகட்டத்தில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத சூழலில் நமது எம்.ஆர்.வி.டிரஸ்ட் நண்பர்கள் வேண்டிய உணவு மற்றும் மருந்து பொருட்களை சுமார் 2-லட்சம் பொதுமக்களின் வீடுகளுக்கே கொண்டு சேர்த்த பெருமை நமது டிரஸ்டை சேர்ந்த நண்பர்களுக்கே சேரும் என்றார். மேலும், சென்னையில் இருந்து ஆர்சனிக் ஆல்பம் என்கிற ஹோமியோபதி மருந்து மாத்திரைகளை ஒரு லட்சம் குடும்பங்களுக்கு எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற அரசின் வழிகாட்டு முறையை துண்டறிக்கையுடன் வழங்கி இருக்கிறோம் என்றார். தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையின் படி அரசின் திட்டங்களில் கால்வாய் வெட்ட முடியாது என்ற விதி இருந்த போது தொடர்ந்து 14-மாதங்களில் சுமார் எட்டறை கிலோமீட்டர் தூரம் சுமார் ஒரு கோடி செலவில் கால்வாய் வெட்டி சீரமைத்து இன்று அதன் மூலம் தண்ணீரும் எம்.ஆர்.வி.அறக்கட்டளை மூலம் விவசாயிகளுக்கு வழங்கி விட்டோம், அதே சமயம் விவசாயிகளின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தூர்வாரி வழங்கி இருக்கிறோம் என்றார். அடுத்த கட்டமாக அரசு பணிக்கான தேர்வுகளை ஏழை எளிய மக்கள் கரூர் மாவட்டத்தில் பங்கேற்று அரசு பணிகளில் பங்கேற்பதற்க்கான திட்டங்களை நிறை வேற்ற வேண்டும் என இந்த இரண்டாம் ஆண்டு விழாவில் திட்டமிட்டு இருக்கிறோம். விரைவில் அதற்க்கான பணிகளை துவக்க இருக்கிறோம் என்றார்.

Leave a Reply