தளபதி விஜய்யின் கேரியரில் ஒரு படம் இவ்வளவு நாள் வெளியாகாமல் தடுமாறியதே கிடையாது. தலைவா படம் தடுமாறினாலும் அடுத்த சில நாட்களிலேயே வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

பிரச்சினை இருக்கும் படங்கள் கூட சொன்ன தேதியில் வெளியான நிலையில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் முதல் முறையாக தளபதி விஜயின் படம் உருவாகியிருந்த நிலையில் வெளியாக முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் என்ற இளம் இயக்குனர் இயக்கத்தில் முதல் முறையாக தளபதி விஜய் நடித்துள்ள இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு எக்கச்சக்கம் ஆக உள்ளது. அதைவிட விஜய்க்கு, விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

அனிருத் இசையமைப்பில் மிரட்டி இருந்த பாடல்களை திரையில் கண்டு கொண்டாட்டம் போட விஜய் ரசிகர்கள் ஏங்கி கொண்டிருக்கும் நிலையில் பட வெளியீடு தள்ளிக் கொண்டே செல்கிறது.

ஆனால் விரைவில் திரையரங்குகள் திறக்கப்பட உள்ள நிலையில் கண்டிப்பாக மாஸ்டர் படம் தீபாவளிக்கு வெளிவருவதற்கு 90 சதவிகிதம் வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தீபாவளி வெளியீட்டுக்கு முன்னதாக மாஸ்டர் படத்தின் ட்ரெய்லரை வெளியிட படக்குழுவினர் ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் அக்டோபர்25 ஆம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு மாஸ்டர் டிரைலர் வெளியாக உள்ளதாம்.

விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவரலாம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Leave a Reply