மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே பிளவாண்டியில் கடந்த 1984 ஆம் ஆண்டு கட்டிய 3 மாடி கட்டிடம் இருந்தது. இக்கட்டிடத்தில் மொத்தம் 21 வீடுகள் இருந்ததாகவும் அதில் அனைத்து வீடுகளிலும் பொது மக்கள் குடியிருந்தனர்.

இந்த 3 மாடி கட்டிடம் நேற்று அதிகாலை 3 மணிக்கு திடீரென இடிந்து விழுந்தது. அப்போது கட்டிடத்தில் குடியிருந்த அனைவரும் தூங்கிக் கொண்டிருந்ததால் தூக்கத்திலேயே பலர் என்ன நடந்தது என்பது தெரியாமலேயே 8 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது.

கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான தகவல் அறிந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் காவல்துறையினர் இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கிய 36 பேரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிய நிலையில் அதில் 10 பேர் உயிரிழந்ததால் மரண எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணிகள் இன்னும் நடைபெற்று வரும் நிலையில் விபத்து தொடர்பாக 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மீட்பு பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Leave a Reply