👉 ரசம் வைக்கும் போது தக்காளியை முதலிலேயே சேர்ப்பதற்கு பதிலாக ரசம் வைத்து முடித்ததும் தக்காளியைத் துண்டுகளாக்கி நெய்யில் வதக்கி சேர்த்துவிட்டால், ரசம் சுவையாக இருக்கும்.

👉 பாயாசத்தில் முந்திரியை வறுத்து சேர்க்கும் போது கறுத்து விடாமல் இருக்க, ஒரு கரண்டி பாயாசத்தை எடுத்து, அதில் முந்திரியை உடைத்துப்போட்டு, மிக்ஸியில் அரைத்து பாயாசத்தில் சேர்த்துவிட்டால், சுவையாக இருக்கும்.

👉 தேங்காய் பர்பி செய்யும் போது, ஏலக்காயுடன், ஒரு கிராம்பும் பொடித்துச் சேர்த்தால் நல்ல மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.

👉 மோர்க்குழம்பு மீதமாகிவிட்டால், சிறிதளவு கடலை மாவைப் பிசைந்து உருண்டைகளாக உருட்டிக் கொண்டு எண்ணெயில் பொரித்துக் குழம்போடு சேர்த்தால் வடைகறி போல் ருசியாக இருக்கும்.

👉 பால் அடிப்பிடித்து தீய்ந்த வாசனை வந்தால், அதில் ஒரு வெற்றிலையைப் போட்டால் அடிப்பிடித்த வாசனை போய் விடும்.

👉 இரண்டு வாழைப்பழம் மற்றும் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்து அதில் ஒன்றரை டம்ளர் பால், ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான பாயாசம் தயார்.

👉 பீட்ரூட் அல்வா செய்யும் போது, பீட்ரூட்டை பாலில் வேக வைத்துவிட்டு, பிறகு மசித்து அல்வா செய்தால் சுவையாக இருக்கும்.

👉 மோர் நிறைய மீந்துவிட்டால், அதில் ஒரு டீஸ்பூன் துவரம் பருப்பைப் போட்டு வைத்தால் விரைவில் புளிக்காமல் இருக்கும்.

👉 வாழைக்காயை ஈரமில்லாத பாலித்தீன் கவரில் போட்டு இறுக்கமாகக் கட்டி ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் ஒரு வாரம் ஆனாலும் பழுக்காமல் இருக்கும்.

👉 தேங்காய் மூடிகள் அதிகம் சேர்ந்து விட்டால், ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, தேங்காய் மூடிகளை அதில் மூழ்கும்படி வைத்துவிட்டால், தினமும் இரண்டு வேளை தண்ணீரை மாற்றினால் நான்கு நாட்களானாலும் தேங்காய் கெடாமல் பிரஷ்ஷாக இருக்கும்.

By RJ

Leave a Reply