கரூரில், அரவக்குறிச்சி எம்எல்ஏவும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான வி.செந்தில் பாலாஜி பேட்டி .

வரும் 27ம் தேதி கரூர் மாவட்ட திமுக சார்பில் முப்பெரும் விழா காணொளி காட்சி மூலம் நடைபெறுகிறது. இதில், கரூர் மாவட்டத்தில் 500 இடங்களில் மொத்தம் 50 ஆயிரம் பேர்கள் பங்கேற்கும் வகையில் இந்த முப்பெரும் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று கரூரில் உள்ள கலைஞர் அறிவாலையத்தில் எம்எல்ஏ செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,

அரசியல் வரலாற்றில் முதன்முறையாக 50 ஆயிரம் பேரை காணொளி காட்சி மூலம் இணைத்து திமுக சார்பில் முப்பெரும் விழா கூட்டம் கரூரில் நடத்துவது இதுவே முதன் முறையாகும்.

பொய் பேசி மக்களை ஏமாற்றுவதில் இரண்டு பெரிய ஆட்கள் உள்ளனர்.

தேர்தல் தேதி எப்போது அறிவித்தாலும் மக்களை சந்திக்க திமுக தயார் நிலையில் உள்ளது. தேர்தல் பணிகளில் திமுக தயாராக இருப்பதாக தகவல்.

கரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும்.

அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பயன்பாட்டிற்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதில் கிடைத்த தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு. நீதிமன்ற உத்தரவினை ஏற்று இப்போதாவது நிதியை மாவட்ட நிர்வாகம் பயன்படுத்தவில்லை என்றால் மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply