தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி கரூர் பெருநகர தேமுதிக சார்பில் சிறப்பு பூஜை மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவரும், பொதுச் செயலாளருமான கேப்டன் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி கரூர் பெருநகர தேமுதிக சார்பில் கரூரை அடுத்த தாந்தோணிமலையில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில் மற்றும் ஊரணி காளியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ச்சியாக ராயனூர் பேருந்து நிறுத்தத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேற்கண்ட நிகழ்ச்சிகளில், கரூர் மாவட்ட செயலாளர் கே.வி.தங்கவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தார். கரூர் பெரு நகர செயலாளர் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் அரவை முத்து, பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜா, கார்த்தி, கரூர் பெரு நகர அவைத்தலைவர் மகாமுனி, பொருளாளர் பழனிவேல், துணை செயலாளர் அருண்குமார், இளைஞரணி ரவிக்குமார், தொண்டரணி மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பிரதிநிதி பன்னீர்செல்வம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Leave a Reply