கரூர் சிவ வேத ஆகம பாடசாலையில் ஆவணி அவிட்ட விழா!!

கரூர் சிவ வேத ஆகம பாடசாலையில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு பூணூல் அணிவிக்கும் விழா நடைபெற்றது

ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை தினம் முடிந்து அடுத்து வரக்கூடிய முதல் பவுர்ணமி நாளில் திருவோண நட்சத்திரத்தன்று தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிகழ்ச்சியான புதிய பூணூல் மாற்றும் விழா சமூக இடைவெளியை கடைபிடித்து நடைபெறுகிறது. இந்நிலையில் ஆவணி அவிட்ட நாளான இன்று கரூர் சிவ வேத ஆகம பாடசாலையின் ஸ்தாபகர் சிவ ஆகம விசாரத் வேத பிரம்ம சிவாச்சாரியார் திலகம் முரளி சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்ற ஆவணி அவிட்ட விழாவில் சுமார் 25-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு புதிய பூணூல் அணிவிக்கும் விழா நடைபெற்றது. கரூர் சிவ வேத ஆகம பாடசாலையில் மாணவர்களுக்கு வேதம், ஆகமம், தமிழ் வேதம் ஆகியவை தொடர்ச்சியாக பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. மூன்றாண்டுகள் படிப்பும், ஓராண்டு செய்முறையும் கற்பிக்கப்பட்டு சான்றிதல்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply