அக்டோபர் 2 நாடு முழுவதும் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும், சுதந்திர போராட்ட தியாகியுமான கர்மவீரர் காமராஜரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. கரூர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள காமராஜரின் முழு திருவுருவச்சிலைக்கு பனங்காட்டு படை கட்சியின் கரூர் மாவட்ட அமைப்பு சார்பில், மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும், கல்விக்கண் திறந்த காமராஜர் புகழ் ஓங்குக! படிக்காத மேதை காமராஜர் புகழ் ஓங்குக! போன்ற கோஷங்கள் எழுப்பி காமராஜருக்கு புகழஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், பனங்காட்டு படை கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் மாரி தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் மணி, மேற்கு மாவட்ட ஒன்றிய செயலாளர் சிதம்பரம், மேற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்தி, துணை ஒன்றிய செயலாளர் பிரபு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply