ஜியோ நிறுவனம் ஜியோ போஸ்ட்பெய்ட் ப்ளஸ் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவை பல்வேறு சலுகையோடு ரூ.399 முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

போஸ்ட்பெய்ட் பிரிவில் கவனம் செலுத்தும் நோக்கில் ஜியோ போஸ்ட்பெய்ட் ப்ளஸ்-ஐ அறிமுகப்படுத்துகிறது. ஜியோபோஸ்ட்பெய்ட் ப்ளஸ் சேவையின் நோக்கம் சுப்பீரியர் சேவைகளை வழங்குவதாகும். இந்த சேவையில் இணைப்பு, பொழுதுபோக்கு அம்சம் மற்றும் எக்ஸ்பீரியன்ஸ் உள்ளிட்ட அணுகலை வழங்குகிறது.

இதுகுறித்து ஜியோ இயக்குனர் ஆகாஷ் அம்பானி கூறுகையில், ஜியோ போஸ்ட்பெய்ட் ப்ளஸ் அறிமுகம் செய்ய இது சரியான நேரம். ப்ரீபெய்ட் பிரிவில் 400 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்து அவர்களின் நம்பிக்கைய பெற்ற பிறகு அதே ஆர்வத்தை போஸ்ட்பெய்ட் பிரிவில் நீட்டிக்க விரும்புகிறோம்.

ஒவ்வொரு போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் வரம்பற்ற ப்ரீமியம் அணுகல் பொழுதுபோக்கு அம்சம், மலிவு விலையில் சர்வதேச ரோமிங் உள்ளிட்ட அம்சங்களை வழங்கும் என கூறினார்.

பொழுதுபோக்கிற்கு நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் உள்ளிட்ட சலுகையை வழங்குகிறது. அதோடு ஜியோ ஆப்ஸ் 650 ப்ளஸ் லைவ் டிவி சேனல்கள், வீடியோ கன்டென்ட், 300-க்கு அதிகமான செய்தித் தாள்கள் அணுகல் கிடைக்கிறது.

இந்தியாவின் முதல் இன்-ஃப்ளைட் சேவைகள், இலவச சர்வதேச ரோமிங் அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்கு, அதேபோல் ரூ.1 செலவில் சர்வதேச வைஃபை ரோமிங் கால்கள், சர்வதேச காலிங் வசதி குறைந்தபட்ச விலை ரூ.50 பைசாமுதல் தொடங்குகிறது.

புதிய ஜியோபோஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டங்களின் விலை ரூ.399, ரூ.599, ரூ.799, ரூ.999, ரூ.1,499. ரூ.399 ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டம் மாதத்திற்கு 75 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம், பயனர்கள் வரம்பற்ற குரலழைப்பு மற்றும் எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. ஒவ்வொரு பில்லிங் சுழற்சியிலும் 200 ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் விருப்பத்தைப் பெறுவார்கள்.

ரூ.599 திட்டம் வாடிக்கையாளர்களுக்கு 100 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு, எஸ்எம்எஸ், 200 ஜிபி டேட்டா ரோல்ஓவர் மற்றும் குடும்ப திட்டத்துடன் கூடுதல் சிம் கார்டு ஆகியவற்றை வழங்குகிறது.

ரூ.799 ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டம் பயனர்களுக்கு 150 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்துடன் 200 ஜிபி டேட்டா ரோல்ஓவர், வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவை கிடைக்கின்றன. குடும்பத் திட்டத்துடன் பயனர்கள் இரண்டு கூடுதல் சிம் கார்டுகளைப் பெறுவார்கள். ரூ .999 ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டத்துடன், ஜியோ 500 ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர், வரம்பற்ற தரவு, குரல் அழைப்பு மற்றும் மூன்று எக்ரா சிம் கார்டுகளுடன் மாதத்திற்கு 200 ஜிபி வரை தரவை வழங்குகிறது.

ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டங்களில் மிகவும் விலை உயர்ந்த ரூ.1,499 பிரீமியம் திட்டம், ஜியோ பயனர்களுக்கு பில்லிங் சுழற்சிக்கு 500 ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டம் அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது.

அனைத்து ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டங்களும் பயனர்களுக்கு நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ டிவி ஜியோ சினிமா உள்ளிட்ட ஜியோவின் சொந்த பயன்பாடுகளுக்கான அணுகலை வழங்குகின்றன. இந்த திட்டங்களுடன் விலையுயர்ந்த நெட்ஃபிக்ஸ் சந்தாவை இலவசமாக வழங்குவது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாகும்.

ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் இணைப்பு தேவைப்பட்டால், அதை வழங்க ஜியோ ஒரு அமைப்பை கொண்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ அல்லது பிற நெட்வொர்க்குகள் பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப்பில் இருந்து 8850188501-க்கு ஹெச்ஐ (HI) என்ற செய்தியை அனுப்பலாம். மேலும் நிறுவனம் புதிய சிம் கார்டை உங்கள் வீட்டுக்கே டெலிவரி செய்கிறது.

ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் இணைப்பை விரும்பும் ப்ரீபெய்ட் பயனர்கள் மேலே குறிப்பிட்டுள்ள குறுஞ்செய்தி மூலம் சிம் கார்டையும் பெறலாம் அல்லது 1800 88998899 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.

Leave a Reply