திருப்பதி கோயிலில் பி‌ரம்மோற்சம் விழாவையொட்டி ஏழுமலையானுக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வஸ்திரம் சமர்ப்பித்தார்.

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருமலைக்கு சென்ற ஜெகன்மோகன் ரெட்டிக்கு திருமலை திருப்பதி‌ தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி மலையப்ப‌ சு‌வாமிக்கு பட்டு வஸ்திரங்‌ளை தலையில் சுமந்து சென்று ஜெகன் மோகன் ரெட்டி சமர்ப்பித்தார்.

ஆந்திர முதல்வருடன், திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர், அமைச்சர்கள் ஆகியோர் உடனிருந்தனர். கருட சேவையில் ஆந்திர முதல்வர் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply