சர்வதேச திரைப்பட விழா திட்டமிட்டப்படி நடக்கும் : கோவா முதல்வர் திட்டவட்டம் !

இந்திய அரசின் திரைப்படத்துறை சார்பில் ஆண்டுதோறும் இந்திய சர்வதேச திரைப்பட விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. 51 ஆவது ஆண்டு திரைப்பட விழா இந்தாண்டு கோவாவில் 20 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா காலக்கட்டம் என்பதால் திட்டமிட்டப்படி சர்வதேச திரைப்பட விழா நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் சர்வதேச திரைப்பட விழா திட்டமிட்டப்படி நடக்கும் என்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். கோவா மாநிலம் பானாஜியில் வரும் நவம்பர் 20 முதல் 28 வரை விழா நடைபெறும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு நடிகர் ரஜினிகாந்துக்கு “ICON OF GOLDEN JUBILEE” என்ற விருதை பிரகாஷ் ஜவடேகர் வழங்கி கவுரவித்தார். இசைத்துறையில் பல சாதனைகள் புரிந்து ஜாம்பவானாக வாழ்ந்து வரும் இசைஞானி இளையராஜாவுக்கு, சிறப்பு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

 

 

 

Leave a Reply