பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையானது வருகிற செப்டம்பர் 18 ஆம் தேதி தொடங்க உள்ளது, செப்டம்பர் 20 வரை தொடரும் இந்த சிறப்பு விற்பனையில் என்னென்ன மொபைல்களின் மீது என்னென்ன சலுகைகள் கிடைக்கும் என்கிற முன்னோட்டம் வெளியாகி உள்ளது. பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையில் எல்ஜி ஜி 8 எக்ஸ் ஸ்மார்ட்போன் மீது ரூ.15,000 என்கிற தள்ளுபடியை பெற்று ரூ.39,990 க்கு வாங்க கிடைக்கும். இதேபோல், ஒப்போ ரெனோ 2 எஃப் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.1,000 என்கிற தள்ளுபடியையும், ரெட்மி கே 20 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.2,000 என்கிற கூடுதல் எக்ஸ்சேன்ஜ் சலுகையையும் பெறும்.
இது தவிர அனைத்து எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் இ.எம்.ஐ பரிவர்த்தனைகளில் 10 சதவீத உடனடி தள்ளுபடியும் கிடைக்கும்.
எல்ஜி ஜி 8 எக்ஸ் தின்க்யூ ஸ்மார்ட்போனை பொறுத்தவரை, தற்போது இதன் 6 ஜிபி + 128 ஜிபி மாடலானது ரூ.54,990 க்கு வாங்க கிடைக்கிறது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையின் போது ரூ.39,990 க்கு வாங்க கிடைக்கும். இது தவிர்த்து ரியல்மி எக்ஸ் 50 ப்ரோ 5ஜி மீது ரூ.3,000 என்கிற தள்ளுபடி கிடைக்கும்.
ஒப்போ ரெனோ 2 எஃப் மாடலை பொறுத்தவரை, ரூ.1,000 என்கிற விலைக்குறைப்பை பெற்று ரூ.17,990 க்கு வாங்க கிடைக்கும். இதேபோல ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.2,000 என்கிற தள்ளுபடியை பெற்று ரூ.13,990 க்கு வாங்க கிடைக்கும்.
இதேபோல், iQoo 3 ஸ்மார்ட்போனை ஒருவர் ரூ.31,990 க்கு வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை (பேஸிக் 128 ஜிபி) ரூ.34,990 ஆகும்.இது தவிர்த்து, இந்த சிறப்பு விற்பனையின் போது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர் மாடலானது செப்டம்பர் 20 அன்று மதியம் 12 மணிக்கு (நண்பகல்) விற்பனைக்கு வரும்.
இது தவிர, இந்த சிறப்பு விற்பனையின் போது பல ஸ்மார்ட்போன்கள் விலைக்குறைப்பு மற்றும் தள்ளுபடிகளை சந்திக்கிறது. மேலும் அவை அனைத்தும் பிளிப்கார்ட்டில் ஒரு பிரத்யேக பக்கத்தில் முன்னோட்டமிடப்பட்டுள்ளன.

By RJ

Leave a Reply