டாஸ்மாக் கடைகள் திறக்கும் முடிவை கைவிடக்கோரி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

கொரனோ தொற்று பரவாமல் இருக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமுலில் உள்ளது. பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்று பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்கப்பட்டிருக்கும் நிலையில், நாளை முதல் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கூறி கரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட மருத்துவர் பாசறை செயலாளர் கருப்பையா, மாவட்ட பொருளாளர் ராகவன், கரூர் சட்டமன்ற தொகுதி தலைவர் இசக்கி குமார், செயலாளர் கார்த்திக், இணை செயலாளர் இளந்தமிழன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply