2 லட்சம் இல்லங்களை தேடிச்சென்று உணவு பொருட்களை சொந்த செலவில் வழங்கிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.!

மாவட்டத்தில் பொதுமக்களுக்கு வீடு வீடாக தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் சென்று நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், 144 தடை உத்தரவு நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதனால், பொதுமக்களுக்கு  தடையின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் வகையில் தமிழக அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில்  போக்குவரத்துத்துறை அமைச்சர்  எம்.ஆர்.விஜயபாஸ்கர்  தனது சொந்த செலவில் கரூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 1 லட்சம் குடும்பங்களுக்கு, 550 ரூபாய் மதிப்பில் உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் இரண்டு பைகள் வழங்கப்படுகின்றது.

ஒரு பையில் 5 கிலோ அரிசியும், மற்றொரு பையில் 2 கிலோ கோதுமை, 1 கிலோ பருப்பு, அரை லிட்டர் சமையல் எண்ணெய், அரைக்கிலோ சர்க்கரை, 1கிலோ உப்பு, 100 கிராம் மஞ்சள் பொடி உள்ளிட்ட மளிகைப்பொருட்களும் வழங்கப்படுகின்றது.
கரூரில் உள்ள  5 திருமண மண்டபங்களில்  அரிசி மற்றும் மளிகை பொருட்கள் பாக்கெட் செய்யப்பட்டு, 25 சரக்கு வாகனங்கள் மூலம் பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள்  வீடு, வீடாக சென்று கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த, 21ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிவாரண உதவிப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில், கரூர் தொகுதியில், 98,560 குடும்பங்களுக்கு, கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 57,258 குடும்பங்களுக்கு, அரவக்குறிச்சி தொகுதியில் 72,529 குடும்பங்களுக்கு என  மொத்தம் 2,28,347  குடும்பங்களுக்கு  வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply